‘தளபதி 65’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

‘தளபதி 65’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’ இந்த படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அனைவரும் ஜார்ஜியா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு ரூபாய் 3 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கு அங்கேயே ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி மட்டுமே சம்பளம் தரப்பட்டு வரும் நிலையில் தமிழில் மார்க்கெட்டே இல்லாத பூஜாவிற்கு ரூபாய் மூன்று கோடி சம்பளமா என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

ஆனால் அதே நேரத்தில் அடுத்த ஆண்டு வரை பூஜாவின் கால்சீட் நிரம்பி இருந்ததாகவும் ஆனால் அந்த கால்ஷீட்டுகளை அட்ஜஸ்ட் செய்து கொடுப்பதற்காக அதிக தொகையை பூஜா கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் தமிழில் விஜய்யுடன் நடித்தால் தமிழ் திரையுலகில் மார்க்கெட்டை பிடிக்கலாம் என்ற காரணத்தினால்தான் ஒரு சில படங்களில் இருந்து அவர் விலகிவிட்டு தளபதி 65 படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது