யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் - யாழ். மாநகர முதல்வர்

யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் - யாழ். மாநகர முதல்வர்

யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டுதல், அசுத்தப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, கழிவுகளை கொட்டினால் 5,000 ரூபாவும், வெற்றிலை எச்சில் உமிழ்ந்தால் 2,000 ரூபாவும் அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்