திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் காலமானார்

திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் காலமானார்

திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் தமது 82ஆவது வயதில் காலமானார்.

இளவாலையைச் சேர்ந்த அவர், ஆரம்பக் கல்வியை இளவாலை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் அதன் பின்னர் புனித ஹென்றிஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

அவர் தமது வாழ்வைக் குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மருதனார் குருமடத்தில் சேர்ந்து புனித பற்றிக்ஸ் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் 1962ஆம் ஆண்டு ஜுலை முதலாம் திகதி ரோம் நகரில் தனது 22ஆவது வயதில் பரிசுத்த பாப்பரசர் 23ஆம் அருளப்பரின் அனுமதியுடன், சிறப்பு திருச்சபைச் சட்டத்தின்படி வயது குறைந்த குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது