
யாழில் 21 பேருக்கு கொரோனா! மேலும் வெளியாகவுள்ள பிசிஆர் முடிவுகள்
யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்ட அவர்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகிய இரண்டிலும் 702 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ். மாநகரில் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 460 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் பிசிஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்