முன்னாள் பிரதமரிடம் மூன்று மணி நேரம் வாக்குமூலம் பதிவு..!
மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று மூன்று மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
அவரின் இல்லத்தில் வைத்து குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 4.30 அளவில் முன்னாள் பிரதமரின் இல்லத்திற்கு சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினர், 7.30 அளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 4 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேறா, பதில் காவல்துறைமா அதிபருக்கு கடந்த மாதமட் 18 ஆம் திகதி ஆலோசனை வழங்கினார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆர்.பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் வசந்த குமார ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுpருந்தமை குறிப்பிடத்தக்கது.