கர்ப்பமடைந்த 15 வயது மாணவி... பெற்றோர்கள் வெளியே சென்ற போது அரங்கேறிய சம்பவம்

கர்ப்பமடைந்த 15 வயது மாணவி... பெற்றோர்கள் வெளியே சென்ற போது அரங்கேறிய சம்பவம்

15 வயது பிளஸ்-1 மாணவியை வன்கொடுமை செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அவ்வூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த சமயத்தில் அதே கிராமத்தை சேர்ந்த குமாரின் மகன் தர்மா (21) என்ற கூலித்தொழிலாளி, அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அம்மாணவி கர்ப்பம் அடைந்தார். இதையறிந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இதுபற்றி அவர்கள், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் தர்மா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.