யாழ்.மேல் நீதிமன்றிலும் கொரோனா

யாழ்.மேல் நீதிமன்றிலும் கொரோனா

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணியாற்றும் பட்டதாரி பயிலுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாசையூரைச் சேர்ந்த அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் பெறப்பட்ட மாதிரிகள் முல்லேரியாவுக்கு அனுப்பப்பட்டது.

அவற்றின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை கிடைக்கப்பெற்றன.

அத்துடன், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சிலரது மாதிரிகளின் முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளதால் அவர்களது மாதிரிகளை மீளப்பெற்று பரிசோதனைக்கு உள்படுத்துமாறு அறிக்கையிடப்பட்டுள்ளது.