தற்காலிக கிரிக்கெட் நிர்வாகக் குழு நியமிப்பு

தற்காலிக கிரிக்கெட் நிர்வாகக் குழு நியமிப்பு

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கான தேர்தல் நடைபெறும் வரை  ஐவர் அடங்கிய குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய, அர்ஜுன டி சில்வா தலைமையில் சுஜீவ முதலிகே, உச்சித்த விக்ரமசிங்க, அஷ்லி டி சில்வா, அமல் எதிரிசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மே 20 ஆம் திகதி ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது