ஐஸ் ரக போதைப்பொருளுடன் காங்கேசன்துறையில் ஒருவர் கைது

ஐஸ் ரக போதைப்பொருளுடன் காங்கேசன்துறையில் ஒருவர் கைது

ஒரு தொகை ஐஸ் ரக போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் காங்கேசன்துறையில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை கட்டுவனை பகுதியை சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது, கைதானவரிடமிருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்