முத்தத்திற்கு புதிய அர்த்தம் கூறிய வனிதா
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த திருமணமும் சர்ச்சையாகி பீட்டர்பாலின் முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக தெரிவித்து வருகிறார் என்பதும் அதற்கு அவ்வப்போது வனிதா பதிலடி கொடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் வனிதா-பீட்டர் பால் திருமணத்தன்று வனிதாவின் உதட்டில் பீட்டர் பால் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் முன் முத்தம் கொடுப்பது குறித்து ஒரு சிலர் சமூக வளைதளத்தில் குற்றஞ்சாட்டி வந்தாலும், வனிதா இதற்கும் பதிலடி பதில்களை தெரிவித்து வந்தார்
இந்த நிலையில் தற்போது வனிதாவின் நெற்றியில் பீட்டர் பால் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர், ‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று’ என குறிப்பிட்டுள்ளார். வனிதாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது