ஜேர்மன் - சுவிட்சர்லாந்திலிருந்து 24 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஜேர்மன் - சுவிட்சர்லாந்திலிருந்து 24 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஜேர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட 24 இலங்கையர்கள் இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க வானுார்தி தளத்திற்கான எமது செய்தி தொடர்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டு குடிவரவு மற்றும் குடியல்வு சட்டங்களை மீறிய குற்றத்திற்காக ஜேர்மனியிலிருந்து 20 பேரும் சுவிட்சர்லாந்தில் இருந்து 4 பேரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஜேர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி வசித்து வந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்