நாடளாவிய ரீதியில் தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தல்!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நேற்று முதல் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எதிர்வரும் 2ம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்த நாள் கிறிஸ்தவர்களுக்கு விசேட நாள் என்பதுடன் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறும்.
இந்த நிலையிலேயே நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாகவே மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள தேவாலயங்களில் இராணுவத்தினர் இரவு பகலாக தொடர்ந்து தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்