கட்டாருக்கு தொழிவாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு இனிப்பான செய்தி

கட்டாருக்கு தொழிவாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு இனிப்பான செய்தி

இலங்கையிலிருந்து கட்டாருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலொன்று வெளிவந்துள்ளது.

இதன்படி கட்டாரில் பணியாற்றும் சகல வெளிநாட்டு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளமாக 1000 ரியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்கான அலுவலகம் இதை தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான கட்டார் தூதுவராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் பிரகாரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயித்த முதலாவது மத்திய கிழக்கு நாடாக கட்டார் திகழ்கிறது.

இந்த சம்பள முறைமை கட்டாரில் பணியாற்றும் சகல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் உரித்தாகும்.

நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பணியாற்றுபவர்களும் இந்த சம்பளக் கட்டமைப்பில் உள்வாங்கப்படுவார்கள்.

இதேவேளை, குறைந்தபட்ச சம்பளமாக 1000 ரியால் வழங்குவதுடன், தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

இந்த வசதிகளை வழங்காதுவிடத்து அதற்காக மேலதிக கொடுப்பனவுகளை ஒதுக்க வேண்டும் என்றும் சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்கான அலுவலகம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.