கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா, வடக்கு மற்றும் தெற்கு அந்தமான் கடற்பரப்பில் கடற்றொழில், மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அக்கடற்பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் அத்திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் ஜெனரல் அதுல கருணாநாயக தெரிவித்துள்ளார்