இந்தவருடத்தின் மூன்றுமாத காலப்பகுதிக்குள் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம்

இந்தவருடத்தின் மூன்றுமாத காலப்பகுதிக்குள் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம்

2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 14 பொலிஸ் அதிகாரிகள் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 10 பேர் கடமையில் இருந்தபோது உயிரிழந்தனர் என்று தலைமையகம் தெரிவித்துள்ளது. மற்றய நான்கு பேரும் விடுமுறையில் இருந்தபோது வீதி விபத்துக்களில் உயிரிழந்தனர்.

மேலும், இந்த மூன்று மாதங்களில் பணியில் இருந்த 13 பொலிஸ் அதிகாரிகள் வீதி விபத்துக்களில் படுகாயம் அடைந்தனர் மற்றும் 49 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர். 2020 ஆம் ஆண்டில், கடமையில் இருந்தபோது 28 பொலிஸ் அதிகாரிகள் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டனர் மற்றும் 89 பேர் படுகாயமடைந்தனர். 176 பேர் சிறிய காயமடைந்தனர்.

2019 ஆம் ஆண்டில், 8 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் இருந்தபோது சாலை விபத்துக்களில் கொல்லப்பட்டனர். 60 பேர் படுகாயமடைந்தனர். 66 அதிகாரிகள் சிறிய காயமடைந்தனர்.

கடமையில் இருந்தபோது வீதிவிபத்துக்களில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 2018 முதல் 2021 வரையான மூன்றுமாதகாலப்பகுதிவரை 54 ஆக உயர்ந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகத்தில் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு அதிகாரி இந்திக ஹபுகொட தெரிவித்தார்