முதலைக்கு இரையான 15 வயதுச் சிறுவன் - சம்பூரில் சோகம்

முதலைக்கு இரையான 15 வயதுச் சிறுவன் - சம்பூரில் சோகம்

சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள இத்திக்குளத்தில் குளிக்கச்சென்ற 15 வயதுச் சிறுவன் முதலைக்கு இரையாகி உள்ளார்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (27) பிற்பகல் 2.30 மணியளவில் நடந்துள்ளது.

இரு சிறுவர்கள் இத்திக்குளத்திற்கு குளிக்கச்சென்ற நிலையில், இத்திக்குளம் - பல்லிக்குடியிறுப்பு பிரிவில் வசிக்கும் 15 வயதுச் சிறுவன் காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து குறித்த சிறுவன் முதலையால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் சோகமும், பீதியுமாக உள்ளனர்.

பொலிஸார், கடற்படை மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து குறித்த சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.