
கொரோனா பரவலின் எதிரொலி- யாழ்.நகரில் பெருமளவில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்!
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினம் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றிருந்தது.
யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது பல தீர்மாணங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ் நகர பகுதியில் அதிகளவான பொலிஸார், இராணுவத்தினர், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.