
வட்டக்கச்சியில் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்
வட்டக்கச்சி பகுதியில் கிணற்றில் வயோதிபர் ஒருவருடைய சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி சிவிக்சென்ரர் பகுதியில் வசிக்கும் மாடசாமி ஆறுமுகம்( வயது 67 ) என்பவரே சடலமாக காணப்பட்டுள்ளார்.
இன்றையதினம் மதியம் 12.30 மணியளவில் வீட்டிலிருத்தவரை காணவில்லை என உறவினர்கள் தேடியபொழுது இறந்த நிலையில் கிணற்றில் சடலமாக கணப்பட்டுள்ளார்.
உடன் தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நீதிமன்ற அனுமதியினை பெற்று உடலை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.