
சிறிதரன் எம்.பியிடம் காவல்துறையினர் வாக்குமூலம்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கிளிநொச்சியில் இன்று (18) மன்னார் காவல் நிலையத்தினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணி பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பொலிகண்டியில் நிறைவு பெற்றது.
மன்னார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர சிறிதரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இன்று பகல் 12.30 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு சென்ற மன்னார் காவல்நிலையத்தினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்