172 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிஷம்!!

172 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிஷம்!!

அம்பலாங்கொட மாதம்பாவில சரணாலயத்திற்கு அருகில் 'கன புஸ்வெலா' என்று அழைக்கப்படும் இரண்டு மிக அரிதான தாவரங்கள் காலி வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Mucuna gigantea என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் இந்த 2 தாவரங்களும் சுமார் 172 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பேராதெனிய தேசிய தாவர அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளரான பாதிய கொபல்லவ இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்,

மேலும் கன புஸ்வெலா 1849 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினார்.

இது குறித்து காலி வனவிலங்கு சங்கத்தின் தலைவர் மதுர டி சில்வா தெரிவிக்கையில்,

இது மிகவும் மதிப்புமிக்க கண்டுபிடிப்பு. இது அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது. அதன் பாதுகாப்பிற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சரணாலயத்திற்கு அருகிலுள்ள தனியார் நிலங்களில் இது இருப்பதைக் கண்டோம். அது பூத்துக் குலுங்கியது. என்றார்.