கச்சேரிக்குள் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய விசேட அதிரடிப்படை!

கச்சேரிக்குள் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய விசேட அதிரடிப்படை!

வவுனியா கச்சேரியில் மோப்ப நாய் சகிதம் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர்தின நிகழ்வு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம், சாள்ஸ் மற்றும் பல விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விழா இடம்பெறவுள்ள மண்டபத்தில் விசேட அதிரடிப் படையினரால் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையிலேயே மோப்ப நாய் சகிதம் பொலிசாரும் தீவிர பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.