பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்!

பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்!

கொரோனாவின் தாக்கத்தினை அடுத்து இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பிரித்தானியாவில் பேருந்துகள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரயில்களில் முககவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கொரோனா வைரஸிலிருந்து சக பயணிகளைப் பாதுகாக்க பேருந்துகள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரயில்களில் பயணிகள் ஜூன் 15 முதல் முகமூடி அணிய வேண்டும்.

பெரும் நிறுவனங்கள் மற்றும் மின்சாரப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை மீண்டும் திறக்க எதிர்பார்க்கப்படுவதற்கான நேரம் முடிந்துவிட்டது.

இதேவேளை, முககவசம் பயண நிபந்தனை என்றும், இணங்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், பிரித்தானியாவில் கொரோனாவால் 39,904 பலியாகியுள்ள நிலையில், 2,81,661 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.