இந்தியாவில் காணாமல் போன கோடிக்கணக்கான பெண்கள் -வெளிவரும் பகீர் தகவல்
இந்தியாவில் 4 கோடியே 58 இலட்சம் பெண்கள் காணமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் குறித்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் சிசுக்கள், பிறந்தவுடன் கொல்லப்பட்ட பெண்குழந்தைகளும் குறித்த எண்ணிக்கையில் அடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 50 வருடங்களில் உலக அளவில் 14 கோடியே 26 இலட்சம் பெண்கள் காணமல்போயுள்ளனர்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலேயே அதிகளவான பெண்கள் காணமல்போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.