கொவிட் 3ஆவது அலைக்கான அபாயம் (காணொளி)
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொவிட் தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு அரசாங்கம் தகுந்த கொள்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லையெனில், 3வது கொவிட் அலைக்கான ஆபத்தை எதிர்நோக்க வேண்டி வருமென அவர் தெரிவித்தார்.
பண்டிகை காலங்களில் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் இயன்றவரை தங்களது பயணங்களை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.