பெஸில் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு ஜுனில் விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றினை, எதிர்வரும் ஜுன் மாதம் 28ஆம் திகதி மீள விசாரணைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மல்வானை பகுதியில், 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து, அதில் வீடொன்றை நிர்மாணித்து, அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின்கீழ், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கம்பஹா இலக்கம் 01 மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது