ஈஸ்டர் தாக்குல் அறிக்கை: மிகுதி அத்தியாயங்களும் சட்ட மா அதிபரிடம் ஒப்படைப்பு!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் மிகுதி 22 அத்தியாயங்களும் சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தொிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 அத்தியாயங்கள் ஏற்கனவே கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணிகளை கருத்திற்கொண்டு மேற்படி 22 அத்தியாயங்களும் கையளிக்கப்படவில்லை என சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எஞ்சிய 22 அத்தியாயங்கள் இன்று சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன