வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை

நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணியின் பின்னர் 50 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் காலி முதல் ஹம்பாந்தொட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்முறை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றானது மணித்தியாலயத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது