யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

கொரோனா தொற்றுநோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம்-சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்மலனை - யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே உள்நாட்டு விமான சேவையை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், ஜனவரி முதல் சுமார் 4,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்களின் இயக்குநர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.

காட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்களின் செயல்பாடுகள் மிகவும் திறமையானவை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.