டிக்டாக் தடை குறித்து இலக்கியாவின் அதிரடி கருத்து!
டிக் டாக்கில் புகழ் பெற்ற இலக்கியா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாச பதிவுகளை டிக்டாக்கில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது தெரிந்ததே. அவரது ஒவ்வொரு வீடியோவும் ஆபாசமாகவும் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டும் அவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் குவிந்ததால் அவரது வீடியோவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்திய அரசு டிக் டாக் உள்பட 59 செயலிகளை தற்போது தடை செய்துள்ளதால் டிக்டாக்கில் மிக தீவிரமாக இருக்கும் இலக்கியா போன்றவர்களுக்கு பெரும் சோகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் டிக்டாக் தடையை தான் வரவேற்பதாகவும் டிக் டாக்-ஐ தடை செய்தது தனக்கு மிகவும் சந்தோஷம் என்றும் இலக்கியா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: டிக்டாக் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. டிக்டாக்கை தடை செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால் நம் நாட்டுக்காக இன்னொரு நாட்டுடன் மோதி நமது நாட்டின் ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். அதற்காக டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. இத்தனை நாள் இந்தியாவில் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்று பல போராட்டங்கள் நடந்தன. ஆனால் அப்போதெல்லாம் தடை செய்யப்படவில்லை. இன்று ஒரு நல்ல விஷயத்திற்காக டிக் டாக் தடைசெய்யப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்று கூறியுள்ளார். டிக்டாக் இலக்கியாவின் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.