அசோக அபேசிங்கவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம்

அசோக அபேசிங்கவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம்

நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து, சர்ச்சையான கருத்தினை வெளியிட்டமை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு முன்னதாக இரண்டு தடவைகள் அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த சந்தர்ப்பங்களில் அவர் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில், இன்று முற்பகல் 9.30 அளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்