இலங்கையில் மற்றுமொரு இயற்கை திரவ மின் நிலையம்!
நாட்டின் இரண்டாவது இயற்கை திரவ மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடுத்த மாதத்திற்கு முன்னர் சர்வதேச ஏலங்களுக்கு அழைப்பு விட வாய்ப்புக்கள் காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்து அது குறித்த ஆவணங்கள் சட்டமா அதிபரின் விளக்கத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த வார இறுதிக்குள் சட்டமா அதிபரின் விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்துள்தாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசில் பழிவாங்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு இறுதி அறிக்கையின் 1, 2 மற்றும் 3 ஆவது அலகுகள் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பவர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளை ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சிங்கள மொழி பிரதியும் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தனால் இவை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன