கொரோனா தொற்று அபாயம்- நிறுத்தப்பட்டது காரைநகர் இ.போ.ச சேவை!

கொரோனா தொற்று அபாயம்- நிறுத்தப்பட்டது காரைநகர் இ.போ.ச சேவை!

காரைநகர் இ.போ.ச. சாலை பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ.போ.ச பேருந்தில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

காரைநகர் சாலையில் பணியாற்றுபவர்களில் 90 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 8 பேருக்கு கோவிட் -19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

அதனால் காரைநகர் சாலையிலிருந்து சேவையில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவில்லை.

இதேவேளை, காரைநகர் சாலையில் பணியாற்று சாரதி ஒருவருக்கு கோவிட் -19 நோய்த்தொற்று உள்ள நிலையில் அவர் நேற்று இடம்பெற்ற அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இ.போ.சவின் வடபிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகளில் ஈ.பி.டி.பி சார்ந்தோரால் நடத்தப்பட்ட இந்த கூட்டம் செயற்பாட்டு முகாமையாளரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் மேலும் சில உத்தியோகத்தர்கள் பங்கேற்றுள்ளனர்.