யாழ். செம்மணி இந்து மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்மப்பொதிக்குள் ஆபத்தான வெடிமருந்துகள்

யாழ். செம்மணி இந்து மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்மப்பொதிக்குள் ஆபத்தான வெடிமருந்துகள்

யாழ்ப்பாணம் - செம்மணி இந்து மயானத்தில் காணப்பட்ட மர்மப்பொதிக்குள் சுமார் 5 கிலோ கிராம் ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் சிறப்பு அதிரடிப்படையினரால் இவை மீட்கப்பட்டன.

3 கிலோ 750 மில்லி கிராம் சி4 மற்றும் டிஎன்டி வெடிமருந்துகள் டெட்டனேற்றர்கள் அதற்கான வயர்கள் என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிமருந்துகள் மீட்கபட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது