உள்நாட்டு துப்பாக்கி, வாள் என்பவற்றுடன் ஒருவர் கைது

உள்நாட்டு துப்பாக்கி, வாள் என்பவற்றுடன் ஒருவர் கைது

ரத்கம பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி, வாள் என்பவற்றுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட நபர் 32 வயதுடையவர், மேலும் அவரிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டும், வாள்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன