முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு  - சாலை பகுதியில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

மீட்கப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது