கடந்த 24 மணித்தியாலங்களில் 1,161 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கடந்த 24 மணித்தியாலங்களில் 1,161 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளில் 1,161 பயணிகளுக்கான வசதிகள் கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி 568 பயணிகள் 08 விமானங்கள் ஊடாக நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அவர்களில் 83 பேர் சவூதி அரேபியாவில் இருந்தும், 90 பேர் கட்டாரில் இருந்து வருகை தந்துள்ளனர்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் நாட்டில் இருந்து 593 பேர் வெளியேறியுள்ளனர்