சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி, அக்கா, அம்மாவாக நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி, அக்கா, அம்மாவாக நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா?

1975ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்று வரை அசத்தி கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இவரது முதல் படம் அபூர்வ ராகங்கள், அந்த படத்தில் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு கணவராக நடித்திருப்பார்,

இத்திரைப்படத்திற்குப் பிறகுதான் சிவாஜிராவாக இருந்த இவர், ரஜினிகாந்த் என கே பாலசந்தரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பின் தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர், இன்று வரை ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இவருடன் நடித்த ஸ்ரீவித்யா, பின்னாளில் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் அவருடனே நடித்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும், உழைப்பாளி திரைப்படத்தில் ரஜினிக்கு அக்காவாகவும் நடித்திருந்தார்.

அப்படி ஒரு நடிகை அணைத்து கதாபாத்திரமாகவும் ரஜினியுடன் நடித்துள்ளார் என்றால் அது ஸ்ரீவித்யா தான்.