விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா? என்ன நிகழ்ச்சி தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ

விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா? என்ன நிகழ்ச்சி தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் முதன்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காதலே காதலே' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி மிகவும் வைரலானது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் விஜய் டிவியில் 'ஓல்ட் இஸ் கோல்ட்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜா ராணி புகழ் சித்து, ஆலியா மானசா, சுனிதா, பாலா, சௌந்தர்யா போன்ற பல விஜய் டிவி பிரபலங்கள் பங்கெடுக்க இருக்கின்றர்.

அதுமட்டுமல்லாது பழங்கால நடிகர்களை போன்று வேடமிட்டு நடிக்கும் கலைஞர்களையும் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த இருக்கின்றனர்.

மேலும் சிறப்பு விருந்தினராக பழங்கால நடிகை லதா பங்கேற்க இருக்கிறார்

மேலும் நிகழ்ச்சியின் போது எம்ஜிஆர் பற்றி பேசும் தருணங்கள் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோவை விஜய் டிவி சற்றுமுன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.