தோட்ட அதிகாரிகளை வீதியில் நிற்க வைத்த சம்பவம் (படங்கள்)

தோட்ட அதிகாரிகளை வீதியில் நிற்க வைத்த சம்பவம் (படங்கள்)

மஸ்கெலியா - ஹோல்ட்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து இன்று ஹட்டன் - மல்லியப்பு சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் முகாமையாளர்கள் உட்பட தோட்ட அதிகாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக, தோட்டங்களில் அரசியல் மயமாக்கலை நிறுத்த வேண்டும், முகாமைத்துவத்துக்கு எதிரான வன்முறையைக் கண்டிக்கின்றோம் உள்ளிட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்