![](https://yarlosai.com/storage/app/news/0e9a35e9ef2e0bd47598757d30a9877e.png)
டுபாயில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய 266 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
டுபாய்க்கு தொழில்வாய்ப்புகளுக்காக சென்று, அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய நிலையில் 266 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதுடன், தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்