கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு

கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 705 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.