சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய தொற்றுறுதியான மாணவர்கள்

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய தொற்றுறுதியான மாணவர்கள்

மன்னார் மாவட்டத்தில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தொற்றுறுதியான 2 மாணவர்கள் கல்வி பொது தராதார சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையில் தனிப்பட்ட ஒரு பரீட்சை மண்டபத்தில் அவர்கள் பரீட்சைக்கு தோற்றி வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் மேலும் 09 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 271 கொவிட்19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் 254 தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்