தலை துண்டாக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்

தலை துண்டாக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்

கொழும்பு - டேம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பை ஒன்றில் தலை துண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி கொலை செய்யப்பட்டு இருந்த இளம் பெண் குருவிட்ட பகுதியில் வசித்தவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிவனொலி பாத மலைக்கு யாத்திரை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில் இளம் பெண்கள் காணாமல் போனது தொடர்பாக சில பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொஸ்கம, கிரிந்திவெல மற்றும் தென் மாகாணத்தில் இதுபோன்ற முறைப்பாடுகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.