
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் சிறீதரனிடம் வாக்குமூலம் பதிவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் இன்றைய தினமும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள அவரின் காரியாலயத்தில் வைத்து ஒட்டுச்சுட்டான் காவல்முறையினர் இன்றைய தினம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு காவல்துறையினராலம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதற்கு முன்னர் கிளிநொச்சி காவல்துறையினராலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது