9 மாத குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய தாய் மற்றும் குழந்தை சிறுவர் சீர்திருத்த நிலையத்திடம் ஒப்படைப்பு (படங்கள்)

9 மாத குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய தாய் மற்றும் குழந்தை சிறுவர் சீர்திருத்த நிலையத்திடம் ஒப்படைப்பு (படங்கள்)

9 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணம் அரியாலை - நாவலடி பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் குழந்தை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை சிறுவர் சீர்திருத்த நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த குழந்தையை கொடூரமாக துன்புறுத்தும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த நிலையில், நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த குழந்தையின் தாயாரிடம் உளவியல் அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன், குறித்த குழந்தையை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி, காயங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டார்.

அதேநேரம், எதிர்வரும் 9ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த தினம் வரையில், அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்