
வெள்ளை வேன் வழக்கு விசாரணை பிற்போடப்பட்டது
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சோடிக்கப்பட்ட வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமிக்கு ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கின் விசாரணைகளை அடுத்த மாதம் 28 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது