பயணப் பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; சடலத்தை கொண்டு வந்த பேருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது

பயணப் பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; சடலத்தை கொண்டு வந்த பேருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது

கொழும்பு, டேம் வீதியில் பெண் ஒருவரின் சடலத்துடன் கூடிய பயணப் பொதியொன்று நேற்று மீட்கப்பட்டது.

இந்த பயணப் பொதி கொழும்புக்கு  பேருந்து மூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் குறித்த பேருந்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஹன்வெல்ல பகுதியில் இருந்து 143 ஹன்வெல்ல - கொழும்பு பேருந்தில் சந்தேக நபர் சடலத்தை கொழும்புக்கு கொண்டு வந்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று (02) நடத்தப்பட உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்க காவல்துறையினர் பல தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்