
தமிழ் முற்போக்கு கூட்டணியின் புதிய அரசியல் குழு உறுப்பினர்கள்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் புதிய அரசியல் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த புதிய அரசியல் குழுவில் எஸ். சசிகுமார், எம். பரணீதரன், எஸ். சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டணியின் பதினான்கு அரசியல் குழு உறுப்பினர்களில், ஐந்து பேர் மற்றும் பொதுசெயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோரை தவிர, ஏற்கனவே சோமா சிறிதரன், அன்டனி லோரன்ஸ், எஸ். விஜேசந்திரன், கே.ரி. குருசாமி, எம். சந்திரகுமார் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இதேவேளை, அரசியல் குழுவிலும், மத்திய குழுவிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைகளை அடுத்த அரசியல் குழுவில் முன்வைக்க உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார விவகாரங்கள் தொடர்பில் விசேட உபகுழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்