இரு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

இரு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.

இதற்கமைய விவசாய அமைச்சின் செயலாளராக எம்.பி.ஆர் புஸ்பகுமார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக பீ.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் இதற்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது