1000 ரூபா அதிகரிப்புக்கான வர்த்தமானியை வெளியிட அரசாங்கத்துக்கு தொழில்துறை ஆணையாளர் பரிந்துரை

1000 ரூபா அதிகரிப்புக்கான வர்த்தமானியை வெளியிட அரசாங்கத்துக்கு தொழில்துறை ஆணையாளர் பரிந்துரை

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு, தொழில்துறை ஆணையாளர் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக இன்றைய தினம் வேதன நிர்ணய சபை ஒன்று கூடியது.

இதன் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு ஏற்கனவே வேதன நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பை வெளியிட்டது.

எனினும் தொழிற்சங்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக நின்றன.

இந்த நிலையில் வேதன அதிகரிப்பு விடயத்தில் இருக்கும் நியாயத்துவத்தை ஏற்றுக் கொண்ட தொழில் ஆணையாளர், அடிப்படை வேதனம் 900 ரூபாய், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 100 ரூபாய் என்ற அடிப்படையில் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட அரசாங்கத்துக்கு பரிந்துரைப்பதாக அறிவித்தார்